ஒரு நாளுக்கு 17 ரூபாய்... விவசாயிகளை அசிங்கப்படுத்தும் மோடி… ராகுல் ட்வீட்

Share:

பிரதமர் நரேந்திர மோடி அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் விவசாயிகளை அவமானப்படுத்துகிறது என காங்கிகரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று தனது ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதால், இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இதில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றன. பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து மக்களவை ஜனவரி 4 வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த பட்ஜெட் பற்றிய கருத்தை காங்கிகரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,
"அன்புள்ள நமோ,

உங்கள் திறமையின்மையும் அகந்தையும் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டது.

ஒரு நாளுக்கு 17 ரூபாய் கொடுப்பது அவர்களது கோரிக்கைகளையும் உழைப்பையும் அவமானப்படுத்துவதாகும்"
 

என்று கூறியிருக்கிறார். 
13ஆம் தேதி வரை நடக்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 அமர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 4 முதல் 8 வரை பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். 

No comments